IFS தேர்வு - மனிதநேய அறக்கட்டளையை சேர்ந்த 3 மாணவ, மாணவிகள் தேர்ச்சி
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், இந்திய வன அலுவலர் பணிக்கு நடத்திய நேர்முகத் தேர்வில், மனிதநேய அறக்கட்டளையைச் சேர்ந்த 3 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐ.எஃப்.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதன்மைத் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணாக்கர்களுக்கு, மாதிரி நேர்முகத் தேர்வுக்கான இலவச பயிற்சி, மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா பயிற்சி மையத்தில் இலவசமாக நடத்தப்பட்டது. இந்திய வன அலுவலர் பணிக்கு, அகில இந்திய அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜே. பிபிஷா 88வது இடத்தையும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த P. பிளஸ்ஸி ஸ்ரீஜில் 110வது இடத்தையும், சென்னையை சேர்ந்த P. அருண் ஸ்ரீனிவாஸ் 125வது இடத்தையும் பெற்றுள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜே. பிபிஷா, சைதை துரைசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.