Hosur News | அரளிக்காய்களை சாப்பிட்ட 4 குழந்தைகள்... ஓசூர் அருகே அதிர்ச்சி சம்பவம்
அரளிக்காய்களை சாப்பிட்ட 4 குழந்தைகள்... ஓசூர் அருகே அதிர்ச்சி சம்பவம்
ஓசூர் அருகே உள்ள பெண்ணாங்கூர் கிராமத்தில் விஷத்தன்மை உள்ள அரளிக்காய்களை சாப்பிட்ட நான்கு சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒன்றாக விளையாடி கொண்டிருந்த போது, மரத்தில் காய்த்து தொங்கிய அரளிக்காய்களை அறியாமையால் அவர்கள் பறித்து சாப்பிட்டுள்ளனர். இதில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், சிறுவர்களின் பெற்றோர் அனைவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.