புனித அலங்கார மாதா அன்னை ஆலய திருத்தேர் பவனி - குவிந்த மக்கள்

Update: 2025-08-31 03:32 GMT

புனித அலங்கார மாதா அன்னை ஆலயத்தில் திருத்தேர் பவனி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள புனித அலங்கார மாதா அன்னை ஆலயத்தில் திருத்தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் நவநாள் திருப்பலி கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக, சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம், பரமக்குடி பங்குத்தந்தை இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று, திருத்தேர் பவனி நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்