Students Issue | சாதி சான்றிதழ் காரணமாக நிராசை ஆகும் உயர்கல்வி | வேதனையுடன் மாணவிகள் வைத்த கோரிக்கை
சாதி சான்றிதழ் காரணமாக நிராசை ஆகும் உயர்கல்வி
ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இதுவரை சாதிச் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் உயர்கல்விக்கு சாதி சான்றிதழ் வேண்டும் என ஆட்சியரை அணுகி மனு அளித்துள்ளனர். உயர் கல்வி பயிலவும், அரசு சலுகைகள் பெறவும் சாதி சான்றிதழ் கட்டாயம் என்ற நிலை இருப்பதால், தங்களால் உயர்கல்வி படிக்க செல்ல முடியவில்லை என மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், விரைவில் சாதிச் சான்றிதழ் வழங்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.