குடியரசுத் தலைவா் வருகை - ஹெலிபேட் தளத்தில் சோதனை
திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காக செப்டம்பா் 3ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திருச்சி வர உள்ளார், அதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலிலுக்கு வருகை தர உள்ளார். இந்த நிலையில் சோதனை அடிப்படையில் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே உள்ள ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டர்கள் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. ஹெலிபேட் தளத்தை மாவட்ட ஆட்சியர் சரவணன் மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகர துணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினர்.