Rain | Flood | கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கிய கனமழை வெள்ளத்தில் திணறும் வாகன ஓட்டிகள்

Update: 2025-06-26 07:29 GMT

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஓரிரு நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில், இன்று திடீரென கனமழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் திடீரென வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டதோடு, திடீரென மழை பெய்ய தொடங்கியது. கோட்டார், மீனாட்சிபுரம், பார்வதிபுரம், புத்தேரி பகுதிகளில் மழை பெய்தது. முதலில் மெதுவாக பெய்யத் தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல வேகமாக கொட்டிய வண்ணம் உள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை நீடித்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, வடசேரி, கோட்டார் உள்ளிட்ட நாகர்கோவில் மாநகரின் சில சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. இதனால், வெள்ளத்தை கடந்து செல்ல இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் திணறிய வண்ணம் உள்ளன. மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருவதால் நீர் நிலைகளிலும் சாறைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து பாயத் துவங்கி உள்ளன

Tags:    

மேலும் செய்திகள்