சென்னையில் அடித்து ஊற்றும் கனமழை - தரையிறங்க முடியாமல் வட்டமடித்த விமானங்கள்

Update: 2025-05-23 17:28 GMT

கனமழை - வானில் வட்டமடித்த 12 விமானங்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை எதிரொலி

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 12 விமானங்கள்

சென்னையில் திடீரென பெய்த கனமழை காரணமாக, சென்னை விமான நிலைய சேவைகள் பாதிப்பு

பெங்களூரூ, திருச்சி, மதுரை, லக்னோ, விஜயவாடா, கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 12 விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது

நீண்ட நேரமாக வானில் வட்டமடித்த ஐதராபாத் விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது

மழை சற்று ஓய்ந்ததும் ஏனைய விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின

Tags:    

மேலும் செய்திகள்