ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவரான டாக்டர் ஜோய் ஆலுக்காஸ், தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே Spreading Joy என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்த நூலை "தங்கமகன் ஜோய்" என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நூலை அறிமுகம் செய்து பேசிய அவர், தங்கள் மீது வர்த்தகத்தை தாண்டி மக்கள் வைத்த நம்பிக்கைதான், ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவருடைய சுயசரிதையில், கேரளாவில் ஒரு எளிமையாக நகை விற்பனையை தொடங்கியதில் இருந்து, உலகின் மிகப்பெரிய நம்பகமான ஜூவல்லரியாக உயர்ந்தது வரையிலான பயணம், விவரிக்கப்பட்டுள்ளது