GH Death | சென்னை ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் ஊழியர் பலி - அதிரடி உத்தரவிட்டு நீதி வழங்கிய கோர்ட்

Update: 2025-12-24 06:49 GMT

ஏ.சி. விழுந்து மருத்துவமனை ஊழியர் பலி- ரூ.5 லட்சம் இழப்பீடு

சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏசி விழுந்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 3வது மாடியில் இருந்து குளிர்சாதன பெட்டி விழுந்ததில், திருநாவுக்கரசு என்ற ஒப்பந்த ஊழியர் கடந்த 2023-இல் உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், 6 வாரத்தில் தமிழக அரசு இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்