``Ganja விக்க மாட்டீயாடா?’’ - Students-க்கு நரக டார்ச்சர்.. கதறி அழுத கொடூர காட்சிகள்
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை செய்ய சொல்லி அரசு கல்லூரி மாணவர்களை ஒரு கும்பல் கடுமையாக தாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சிதம்பரம் சீர்காழி செல்லும் சாலையில் உள்ள அரசு ஐடிஐ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலரிடம் ஒரு கும்பல் கஞ்சாவை கொடுத்து விற்பனை செய்ய கூறியுள்ளனர். அதற்கு மாணவர்கள் மறுத்த நிலையில், கஞ்சா கும்பல் மாணவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், கஞ்சா வியாபாரி சிவா, வினோத்குமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும், வீடியோவை பதிவு செய்த விமல்ராஜ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.