Puducherry Latest News | கூட்டு பலாத்காரம்.. தண்டனையை கேட்டதும் அதிர்ச்சியான 4 அரக்கர்கள்
பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை
தனியார் நிறுவன பெண் ஊழியரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண்ணை, விழுப்புரத்தை சேர்ந்த 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கபட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.