விஜய் பிறந்தநாள் த.வெ.க. சார்பில் இலவச மருத்துவ முகாம்.....

Update: 2025-06-22 15:45 GMT

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் 51 வது பிறந்தநாளையொட்டி, த.வெ.க. நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. வீரவநல்லூரில் நடைபெற்ற முகாமுக்கு, த.வெ.க. மாவட்டச் செயலாளர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் 51 பேர் ர‌த்த தானம் செய்தனர். பின்னர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து இலவச மருத்துவ முகாமுக்கு வந்திருந்த ஏராளமானோர், இருதய மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், ரத்த அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ முகாமுக்கு வந்த பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி, மேல் சிகிச்சைக்கும் மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். விஜய்யின் பிறந்த‌நாளையொட்டி நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமில், த.வெ.க. நிர்வாகிகள், சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்