குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு துரதிஷ்டமாக மாறிய அதிர்ஷ்ட எண்

Update: 2025-06-14 09:38 GMT

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு அவரது அதிர்ஷ்ட எண்ணே துரதிஷ்டமாறிய சோகம் நிகழ்ந்துள்ளது. லண்டனில் உள்ள தனது மகளை காண குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு விமானம் மூலம் செல்லவிருந்த நிலையில் துரதிஷ்டவசமாக அந்த விமானம் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்தார். இதனிடையே அவர் தனது அதிர்ஷ்ட எண்ணாக நினைத்த 1206 என்ற எண்ணிலே தனது அனைத்து வாகனங்களையும் வாங்கியுள்ளார். ஆனால் விதியின் விளையாட்டு , 12ம் தேதி 6ம் மாதம் அவர் உயிர் பிரிந்துள்ளது. அதிலும் இருக்கை எண், அவர் உயிரிழந்த நேரம் என அனைத்தும் 12 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்