"இறந்தவரின் கைரேகையும்..ஆதார் Data வும்" முக்கிய வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவு
"இறந்தவரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட முடியாது"
உரிமை கோரப்படாத இறந்த நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்பதற்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டிவனம் டி.எஸ்.பி. தொடர்ந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கருவிழி ஸ்கேன், கைரேகை தகவல்களை தடயவியல் நோக்கங்களுக்காக சேகரிப்பதில்லை. இறந்துபோன ஒரு நபரின் கைரேகையை, 'ஆதார்' கைரேகை உடன் ஒப்பிட்டு, தகவல்களை வழங்குவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என மத்திய அரசு தரப்பில் தெவிக்கப்பட்டது.
மத்திய அரசின் வாதத்தை ஏற்ற நீதிபதி, இந்த விவகாரத்தில், திண்டிவனம் டி.எஸ்.பி., மனு தாக்கல் செய்தது அபத்தமானது என்று கூறினார். குற்ற வழக்கில் தீர்வு எட்ட, ஆதார் மட்டுமே வழி அல்ல விசாரணைக்கு வேறு வழிகளும் உள்ளன எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.