ஸ்டேஷனில் பெண் SSI திடீர் மரணம்.. வெளிவந்த தகவல்.. நாமக்கல் SP எச்சரிக்கை
பணிச்சுமையால் பெண் SSI மரணம் என வதந்திகளை பரப்ப வேண்டாம் என நாமக்கல் எஸ்பி எச்சரிக்கை
நாமக்கல் அருகே காவல்நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தது குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் என மாவட்ட கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார். பேளுகுறிச்சி காவல்நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ ஆக பணியாற்றிவந்த காமாட்சி என்பவர், கடந்த ஒன்றாம் தேதி இரவு ரோந்து பணிக்கு சென்று திரும்பிய பின் ஓய்வெடுக்க சென்றதாக கூறப்படும் நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து விளக்கம் அளித்த ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார், மீனாட்சி கடந்த 90 நாட்களாக விடுப்பில் இருந்த நிலையில் அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தார். ஆனால் முறையாக விடுப்பு வழங்காமல் பணிச்சுமைக்கு ஆளாக்கியதே காமாட்சியின் மரணத்திற்கு காரணம் என தகவல் பரப்பப்படும் நிலையில், இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா அறிக்கை வெளியிட்டுள்ளார்.