கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை 'தமிழ் தெம்பு' எனப்படும் தமிழ் மண் திருவிழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்திந்த ஈஷா யோகா உறுப்பினர், மரபின் மைந்தன் முத்தையா, கடந்த ஆண்டை விட கூடுதலாக 150 அரங்குகள் அமைக்கப்படுவதாகவும், தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் அரங்குகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.