ஈரோடு கிழக்கில் பிரசாரம் சென்ற அமைச்சரிடம் பெண்கள் முறையீடு

Update: 2025-01-19 07:29 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி பிரசாரம் மேற்கொண்டபோது, குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்யுமாறு பெண்கள் முறையிட்டனர். அன்னை சத்யா நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளன. இந்நிலையில், அங்கு வந்த அமைச்சர் முத்துசாமியிடம், குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்து தருமாறு பெண்கள் முறையிட்டனர். தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்திய அமைச்சர் முத்துசாமி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்