EPS Promise | AIADMK | விவசாயிகளுக்கு உறுதி கொடுத்த எடப்பாடி பழனிசாமி | Farmers
"அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும்"
EPS Promise | AIADMK | விவசாயிகளுக்கு உறுதி கொடுத்த எடப்பாடி பழனிசாமி | Farmers
அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்கள் சங்கங்களுடன், எடப்பாடி பழனிசாமி சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், பாபநாசம்- மணிமுத்தாறு அணை இணைப்பு சாத்தியமா? சாத்தியம் இல்லையா? என்பது தொடர்பாக, உரிய ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.