"Dy.CM உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல் மட்டுமே... கொரோனா இல்லை.." -சுகாதாரத்துறை
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் முற்றிலும் தவறானது எனவும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. காய்ச்சல் காரணமாகவே தொண்டர்களை அவர் சந்திக்கவில்லை, சாதாரணமான காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாகவே ஓய்வில் உள்ளதாகவும், எவ்வித பாதிப்புகளும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியதால் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.