Srivilliputhur | ``கோயிலுக்குள் குடித்துவிட்டு ஆபாச கும்மாளமா..’’ கண் கலங்கி அர்ச்சகர்கள் வீடியோ

Update: 2025-06-28 03:47 GMT

அர்ச்சகர்கள் ஆபாச நடனம் - வீடியோ வெளியிட்டு மறுப்பு

ஆபாச நடன வீடியோ சர்ச்சையில் சிக்கிய அர்ச்சகர்கள் புதிய வீடியோ வெளியிட்டு மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆபாச நடனம் மற்றும் பெண்களின் முகத்தில் விபூதி அடிப்பது போன்ற வீடியோ வெளியான விவகாரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் தற்காலிக அர்ச்சகர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிந்த போலீசார், 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில், அர்ச்சகர்களான வினோத் மற்றும் கணேசன் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், தங்களுக்கு தொடர்பு இல்லாத 7 வருடங்களுக்கு முன் எடுத்த வீடியோ உடன் இணைத்து, கோயிலில் மது அருந்தி விட்டு நடனமாடியதாக பரப்பப்படுகிறது. கும்பாபிஷேக விழாவில் நாங்கள் பணி செய்யக் கூடாது என்பதற்காக காழ்ப்புணர்ச்சியுடன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்