கையும் களவுமாக பிடிபட்ட லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் | District Magistrate

Update: 2025-09-10 03:02 GMT

மதுரையில் கிரஷர் குவாரி அனுமதி வழங்க, லஞ்சம் பெற்றதாக தெற்கு வட்டாச்சியர் ராஜபாண்டி மற்றும் அவரது ஓட்டுநர் ராம்கி ஆகியோர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சின்ன உடைப்பை சேர்ந்த ரத்னம் என்பவர், கிரஷர் குவாரி அமைக்க அனுமதி கேட்ட நிலையில், வட்டாட்சியர் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது ஓட்டுநரிடம் வழங்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து ரத்னம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர். மேலும் இதை தொடர்ந்து ரத்னம் அந்த பணத்தை ஓட்டுநர் ராம்கியிடம் வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டாட்சியர் மற்றும் ஓட்டுநரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்