தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூர் பேரூராட்சி புதுதெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மகள் சத்யபிரியா (22) பி காம், சி ஏ என ஆடிட்டருக்கு படித்துள்ளார். இவருக்கு சுவாமிமலை அருகே திம்மக்குடி பகுதியை சேர்ந்த ராஜ் என்பவரது மகன் விஜய் (26)என்பவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்தாண்டு மே மாதம் 19 ந் - தேதி வேப்பத்தூர் கல்வெட்டு மாரியம்மன் கோவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு மாதத்தில் திருமணம் செய்வதாக கூறப்பட்ட நிலையில் 11 மாதங்களுக்கு மேல் ஆகியும் நிச்சயதார்த்தம் செய்த பெண்ணை திருமணம் செய்யாமல் மாப்பிள்ளை விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் காலம் தாழ்த்தி வந்து உள்ளனர்
இதனால் மனமுடைந்த கோவிந்தராஜ் மகள் சத்தியபிரியா கடந்த 16-ந் தேதி காலை வீட்டின் அறையில் தூக்கிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் அவரை தஞ்சையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி சத்திய பிரியா உயிரிழந்தார் இதனைத் தொடர்ந்து அன்று மாலை இறந்த பெண்ணின் உடலை உறவினர்கள் இறுதி சடங்கை முடித்துள்ளனர்
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த சத்யபிரியாவின் தந்தை கோவிந்தராஜ். நிச்சயதார்த்தம் செய்த மாப்பிள்ளை வக்கீல் விஜய் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தனது பெண்ணை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்த நிச்சயதார்த்த மாப்பிள்ளை விஜய் மற்றும் அவரது குடும்பத்தார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸார் எந்தவித நடவடிக்கையும்.இதுவரை எடுக்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போலீசார் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர்