வேலூர் விஐடி அண்ணா அரங்கத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், தினத்தந்தி நாளிதழ் மற்றும் விஐடி இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, 1980-களிலேயே சிவந்தி பயிற்சி மையம் தொடங்கி தினத்தந்தி பல அதிகாரிகளை உருவாக்கியதாக தெரிவித்தார். மேலும் போட்டித் தேர்வுகளில் தென்னக பகுதிகளை சேர்ந்தோர் வெற்றி பெற்றதற்கு தினத்தந்திக்கு முக்கிய பங்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.