Dharapuram | Van Accident | முருக பக்தர்கள் வேன் கவிழ்ந்து கோரம் - பள்ளி மாணவி உயிரிழப்பு

Update: 2026-01-06 04:50 GMT

தாராபுரம் அருகே முருக பக்தர்கள் பயணம் செய்த வேன் கவிழ்ந்து இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற மாணவி மீது வேன் கவிழ்ந்து சம்பவ இடத்தில் பலி, 16 முருக பக்தர்கள் காயம்

திண்டுக்கல் மாவட்டம் நல்லி கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் 40, தாராபுரம் சர்ச் சாலையில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்,இவரது மகள் கோபிகா 17, தாராபுரத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார், தங்கள் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து தாராபுரம் பழனி சாலையில் உள்ள தாசவநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்தில் ஏறி தாராபுரம் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம்,

இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் தாசநாயக்கன்பட்டி அருகே சாலையை கடக்கும் என்ற போது காங்கேயத்தை சேர்ந்த முருக பக்தர்கள் பழனிக்கு சென்று விட்டு வேன் ஒன்றில் திரும்பி வந்து கொண்டிருந்தனர் அப்போது தாசநாயக்கன்பட்டி அருகே வரும் போது எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்ததில் சாலையைக் இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற மாணவி மீது வேன் கவிழ்ந்து விழுந்ததில் பள்ளி மாணவி கோபிகா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினார்,

வேன் கவிழ்ந்த விபத்தில் வேனில் பயணம் செய்த முருக பக்தர்கள் காங்கேயத்தைச் சார்ந்த செல்வ பரணிதரன் 27, குமாரசாமி 60, ஜவகர் 45, பழனிச்சாமி 40, மற்றும் செந்தில், சுகுமார் ,தாமரைக்கண்ணன், சேனாதிபதி உட்பட பதினாறு பேர் காயமடைந்து அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றனர், விபத்தில் பலியான மாணவி கோபிகாவின் உடல் தாராபுரம் அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது, முருக பக்தர்கள் படுகாயம் அடைந்த சம்பவமும் விபத்தில் மாணவி உயிரிழந்த சம்பவமும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்