Nellai | ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த மாணவனுக்கு அரிவாள் வெட்டு - நெல்லையில் பயங்கரம்
பணகுடி அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவனை அதே பகுதியைச் சேர்ந்த சபரி ராஜன் என்பவர் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு சிறுவன் மறுத்ததால் அவரை அரிவாளால் சபரி ராஜன் தாக்கியுள்ளார். இதனால், காயமடைந்த சிறுவனை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை வெட்டியதாக சபரி ராஜனை பணகுடி போலீசார் கைது செய்துள்ளனர்.