kanchipuram | Death | பேருந்தில் மோதி சிதறிய ஸ்கூட்டர்.. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்த மாணவன்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் அரசு பேருந்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்..தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த இரண்டாம் கட்டளை பகுதியை சேர்ந்த சரவணன், குன்றத்தூரில் டியூஷன் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது ஆண்டாங்குப்பம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.