திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Update: 2025-06-22 10:33 GMT

கிருத்திகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை ஒட்டி திருத்தணி முருகன் கோவில் குவிந்த பக்தர்கள், 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முருகபெருமானின் 5ம் படை வீடானதிருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கிருத்திகையையொட்டி அதிகாலையில் மூலவருக்கு தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 100 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்