திருவாரூர் அருகே தென்குடி கிராமத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.இதில் 40 அடி உயர சப்பரத்துடன் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குழியில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும் இந்த தீமிதி திருவிழாவில் 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.