Derail | Train Accident | ரயிலில் 13 பெட்டிகள் தடம்புரண்டு பயங்கர விபத்து
உ.பி.யில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ஆக்ரா - டெல்லி இடையிலான ரயில் பாதையில், இரவில் சரக்கு ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு ரயில்வே ஊழியர்கள் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.