Delivery Boy | Food Delivery | ரூ.5 லட்சம்.. டெலிவரி ஊழியர்களுக்கு தமிழக அரசின் மெகா அறிவிப்பு
டெலிவரி ஊழியர்களுக்கு குழு காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்த தமிழக அரசு
தமிழகத்தில் இணைய வழி சேவையில் பணிபுரியும் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு, குழு காப்பீடு திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. விபத்தால் மரணமடைந்தால் 5 லட்சம் ரூபாயும், விபத்தால் கை கால்களை இழந்தால் இரண்டரை லட்சம் ரூபாயும் நிவாரண வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத்தை பெற
கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் தேவையான ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவுகோல், நிபந்தனைகளை கவனமாகப் பின்பற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.