பிணத்தை நடு ரோட்டில் வைத்து பயங்கர வாக்குவாதம் - திடீர் தள்ளுமுள்ளு.. பரபரப்பு
சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பு - இறந்தவர் உடலுடன் வாக்குவாதம்
சாத்தான்குளம் அருகே சுடுகாடு பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி ஊர் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் முள்வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கிராமத்தில் வசிக்கும் ஒருவர் உயிரிழந்த நிலையில் சுடுகாட்டிற்கு செல்ல தனிநபர் ஆக்கிரமப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று அந்த பகுதி பெண்கள் முள் வெளியே பிரித்து எரிந்து இறந்தவர் உடலை தோளில் சுமந்து கொண்டு உள்ளே சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வருவாய்த்துறையினர் முழுமையாக அளவீடு செய்து சுடுகாடு செல்வதற்கு பாதையை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.