Cuddalore News | 27 கஞ்சா வியாபாரிகள் கைது - 47 கிலோ கஞ்சா பறிமுதல்

Update: 2025-10-06 03:05 GMT

கடலூரில், ஒரே நாளில் 27 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 42 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேப்பூர் பகுதியில் கடந்த மாதம், கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,ஒடிசாவில் இருந்து ரயில் மற்றும் கார் மூலமாக தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து, முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், வெளிச்செம்மண்டலம் மற்றும் சிலம்பிநாதன் பேட்டை பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா கஞ்சம் பகுதியை சேர்ந்த பிரதாப் சுவைன், தங்க பாண்டி உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 47 கிலோ கஞ்சா, 3 இரு சக்கர வாகனம், 17 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்