Cuddalore | "நான் யார் தெரியுமா?.. என் காருலயே CHECKING-ஆ" விபூதி அடிக்க பார்த்த போதை ஆசாமிகள்!

Update: 2025-10-19 11:44 GMT

கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகன சோதனையின் போது பல்வேறு வாகனத்தில் வந்தவர்கள் ஏராளமான மது பாட்டில்களை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாட்டில்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அங்கேயே அழிக்கப்பட்டது. அப்போது சென்னையிலிருந்து ஒரே காரில் 5 நபர்கள் வந்தார்கள் அந்த காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் வந்த ஐந்து பேரும் மது போதையில் இருந்ததுடன் மது பாட்டில்களும் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது நான் கலெக்டர் பிஏ என் வாகனத்தையே சோதனை செய்கிறீர்களா எனக்காவல் கண்காணிப்பாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வாகனத்தில் போலீஸ் என ஏன் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளீர்கள் எனக் கேட்டபோது என்னுடைய மனைவி போலீஸ் அதனால் ஒட்டி உள்ளேன் என காரில் இருந்த ஒருவர் தெரிவித்தார். இது அரசு வாகனமா எதற்காக ஸ்டிக்கர் ஓட்டினீர்கள் என கேள்வி எழுப்பிய எஸ்பி ஸ்டிக்கரை எடுக்க காவலர்களுக்கு உத்தரவிட்டார். உடனடியாக காரில் இருந்த ஸ்டிக்கர் அகற்றப்பட்டதுடன் அந்த காரை பறிமுதல் செய்ய காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். ஐந்து பேரிடமும் தற்போது கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்