கூகுள்மேப் மூலம் ஸ்கெட்ச்..பங்களாக்களில் கொள்ளையடித்தது எப்படி? ஞானசேகரன் பகீர் வாக்குமூலம்
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திருடிய 100 சவரன் நகைகளை பள்ளிக்கரணை போலீசார் மீட்டனர். ஞானசேகரனை திருட்டு வழக்கில் கைது செய்த பள்ளிக்கரணை போலீசார், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரண நடத்தி வருகின்றனர். அப்போது, பள்ளிக்கரணையில் பல வீடுகளை நோட்டமிட்டு 250-க்கும் மேற்பட்ட சவரன் நகைகளை கொள்ளை அடித்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். அதனடிப்படையில், அவரிடம் இருந்து சுமார் 100 சவரன் நகைகளை மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.