Crime | Tenkasi | வழக்கமான சண்டையை கொ*லயில் முடித்த கணவன் - கோர்ட் கொடுத்த நரக தண்டனை
மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை, தென்காசியில் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராமருக்கும் அவரது மனைவி வேல்மதிக்கும் இடையே தினந்தோறும் சண்டை நடந்து வந்தது. ஒரு கட்டத்தில் மனைவியை கழுத்தை நெறித்து ராமர் கொலை செய்தார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில், ராமருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தென்காசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.