"இதை செய்தால் உனக்கு கல்யாணம்" தாயின் வேத வாக்கை மீறாத மகன் - ரத்த வெள்ளத்தில் மிதந்த சித்தி

Update: 2025-01-28 15:29 GMT

"இதை செய்தால் உனக்கு கல்யாணம்" தாயின் வேத வாக்கை மீறாத மகன் - ரத்த வெள்ளத்தில் மிதந்து நின்ற சித்தியின் மூச்சு

சொத்து கேட்டு தந்தையோட வாக்கு வாதத்துல ஈடுபட்டுருக்காரு இங்க ஒரு மகன்.. தடுக்க வந்த சித்திய இரும்பு ராடாலே அடிச்சு கொன்னு போட்டுருக்காரு .. தாய் போட்டு கொடுத்த ஸ்கெட்ச் தான் கொலைக்கு காரணமா..?

குழந்தையில் தன் மகளுக்கு புகட்டிய பால் எல்லாம் ரத்தமாக தரையில் உரைந்து கிடக்குறது என்றால் எந்த தாயால் அதை தாங்கி கொள்ள முடியும்?

அந்த தாயை சமாதானப்படுத்த முடியாமல் அங்கிருந்தவர்கள், திகைத்து போய் அமர்ந்திருந்தனர். இப்படி ஒரு பயங்கரம் நடந்து விடும் என்று யாரும் யோசித்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

அங்கிருந்தவர்களின் கண்ணீருக்கும் , சோகத்துக்கும் காரணம், வீட்டின் உள்ளே இரத்த வெள்ளத்தில் கிடந்த ஒரு பெண்ணின் சடலம்..

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விசாரனையை தொடங்கினார்கள்..

கொல்லப்பட்டவர் ஜோதி.. 40 வயதான இவர் 20 வருடங்களுக்கு முன்பு 65 வயதான ரங்கசாமியை என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் வாரிசுகள் உள்ளனர்.. ரங்கசாமி ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர்.

சம்பவத்தன்று ரங்கசாமியை ஒரு மர்ம நபர் வீடு புகுந்து இரும்பு ராடால் தாக்கியிருக்கியிருக்கிறார்.. கணவர் கொடூரமாக தாக்கப்படுவதை நேரில் பார்த்து பயந்து போன ஜோதி அவர் உயிருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என பயந்து குறுக்கே பாய்ந்து தடுத்திருக்கிறார்..

ஆனால் கொலை வெறி கொண்ட அந்த நபர் பெண் என்றும் பாராமல் ரங்கசாமியின் மேலிருந்த மொத்த வெறியையும் ஜோதி மேல் காட்டியிருக்கிறார்.. ரத்தம் பீறிட்டு அடிக்க சம்பவ இடத்திலேயே ஜோதி பரிதாபமாக இறந்து போயிருக்கிறார்..

குற்றவாளி யார்... எதற்காக இந்த கொலை வெறி தாக்குதல்... என போலீசார் விசாரித்த போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்திருக்கின்றன..

இந்த கொடூரத்தை செய்தது வேறு யாரும் இல்லை ரங்கசாமியின் 38 வயதான மகன் ஜெயராஜ்... ஆம்... ரங்கசாமிக்கு ஜோதி ஒன்றும் முதல் தாரம் இல்லை, இரண்டாம் தாரம்.. ரங்கசாமிக்கு மாரியம்மாள் என்பவருடன் ஏற்கனவே திருமணம் முடிந்திருக்கிறது.. அவர்களுக்கு பிறந்தவர் தான் இந்த கொலைகார புதல்வன் ஜெயராஜ்..

ஜெயராஜ் மீது 17 குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.. அடி தடி திருட்டு என ஜெயராஜ் செய்யத குற்ற செயல்களே இல்லை என சொல்லலாம். ஒரு ரவுடியை போல ஊருக்குள் உலா வந்திருக்கிறார் ஜெயராஜ்.

22 வருடங்களுக்கு முன் ரங்கசாமிக்கும் மாரியம்மாளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒரே காம்பவுண்டில் இருக்கும் இந்த வீடுகளில் தனி தனியாக பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.. ஆனால் சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை.

இந்த சூழலில் முதல் மனைவிக்கும் மகனுக்கும் சேரவேண்டிய சொத்துக்களை பிரித்து கொடுத்த ரங்கசாமி, இரண்டாவதாக ஜோதியை திருமணம் முடித்திருக்கிறார்..

அதன் பிறகு ரங்கசாமியின் சொத்து மதிப்பு சற்று கூட ஆரம்பித்திருக்கிறது.. நில புலங்களை வாங்கி வசதியாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.. மேலும் வீட்டிற்கு முன்புறம் கடைகளை கட்டி வாடகைக்கும் விட்டு வந்திருக்கிறார்..

ரங்கசாமியின் இந்த அதீத வளர்ச்சி, அதே காம்பவுண்டில் வசித்து வந்த முதல் மனைவி மாரியம்மாளின் கண்களை உறுத்தியிருக்கிறது. கணவர் புதிதாக சேர்த்திருக்கும் சொத்துகளிலும் பங்கு போட நினைத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்த மாரியம்மாள் தன்னுடைய மகன் ஜெயராஜையே பகடையாக பயன்படுத்தியிருக்கிறார்.

ஜெயராஜ் வீட்டில் இருக்கும் போதெல்லாம் “உன் தகப்பனிடம் சொத்தை பிரித்து கொடுக்க சொல், அப்போ தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்“ என மகனின் மனதில் ஆசையை தூண்டி நஞ்சை விதைத்திருக்கிறார் மாரியம்மாள்..’

தாயின் சொல்லை வேதவாக்காக நினைத்த ஜெயராஜ் அவ்வப்போது ரங்கசாமியை சந்தித்து சொத்தை மீண்டும் பிரித்து தர கேட்டு தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் ஜெயராஜிக்கு ஆத்திரம் தலைக்கேறியிருக்கிறது.

இந்த சூழலில் தான், இரண்டில் ஒன்றை பார்த்துவிட வேண்டும் என்று

சம்பவத்தன்று உறவுக்காரனான தமிழ்செல்வன் என்பவரை அழைத்துக் கொண்டு தந்தையின் வீட்டுக்கு சென்றிருக்கிறார் ஜெயராஜ்.

இருவரும், ரங்கசாமியிடம் சொத்தை பிரித்து தர சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்... ஆனால் ரங்கசாமி தனது முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார். அவர்களின் உருடல் மிரட்டலுக்கு பயப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெயராஜ் அருகில் இருந்த இரும்பு ராடை எடுத்து தந்தையை தாக்க ஆரம்பித்திருக்கிறார்.

இதை வீட்டில் இருந்து பார்த்து கொண்டிருந்த ஜோதி தடுக்க பாய்ந்த போது ஜெயராஜ் சித்தி என்றும் பாராமல் அவரை சரமாரியாக அடித்தே கொலை செய்திருக்கிறார்..

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்ய தூண்டிய மாரியம்மாள், கொலை செய்த ஜெயராஜ், மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த தமிழ்செல்வன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்..

Tags:    

மேலும் செய்திகள்