Cookingcompetition | தினத்தந்தி, இந்தியன் ஆயில் இணைந்து நடத்திய சமையல் போட்டி -அசத்திய இல்லத்தரசிகள்

Update: 2026-01-26 05:33 GMT

தினத்தந்தி, இந்தியன் ஆயில் இணைந்து நடத்திய சமையல் போட்டி

தினத்தந்தி மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து “இல்லத்தரசிகளுக்கான ஆரோக்கிய உணவுகள் சமையல் போட்டியை“ வேலூர் மாவட்டம் பாரதிநகர் விரிவு பகுதியில் நடத்தியது. வாணி வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமான இல்லத்தரசிகளும், இளம் பெண்களும் கலந்து கொண்டு, தாங்கள் சமைத்த ஆரோக்கிய உணவை காட்சிப்படுத்தினர். அதில் சிறந்த மூன்று உணவுகளை நடுவர் குழு தேர்வு செய்து பரிசளித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்