Chidambaram | Police | போலீசாருடன் மல்லுக்கட்டிய தீட்சிதர்கள் - சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரபரப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் தள்ளுமுள்ளு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், தீட்சிதர்களுக்கும், போலீசாரும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது...
கோவில் பொது தீட்சிதர்கள் அவர்களது கட்டளைதாரர்களை ஆயிரங்கால் மண்டபம் என்று சொல்லப்படும் ராஜ சபைக்கு அழைத்துச் சென்று நடராஜர் அருகில் அமர வைத்து சுவாமி தரிசனம் செய்து வைப்பார்கள்.
இதுபோன்று சில தீட்சிதர்கள் கட்டளைதாரர்களை அழைத்து செல்லும்போது போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால்,போலீசாருக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளானது.
இதனால் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.