Dhimbam | Erode | ஊர் திரும்பும் மக்கள் - கிலோமீட்டர் கணக்கில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
விடுமுறை முடிந்து சுற்றுலா பயணிகள் ஊர் திரும்புவதால் ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் நீண்ட வரிசையாக அணிவகுத்து நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிக்கு ஆளாகினர். இதன் காரணமாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.