கே.கே நகர் பகுதியில் வீட்டில் தங்க நகைகளை திருடிய வழக்கில் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விருகம்பாக்கம் ,வேம்புலி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் சுப்புராமன். இவரது வீட்டில் கிருஷ்ணவேணி, ஜெயகாந்தன் ஆகிய இருவர் பணி செய்து வந்தனர். இந்த நிலையில், வீட்டு லாக்கரில் இருந்து தங்க நகைகள் திருடபட்டதாக கே.கே.நகர் காவல்நிலையில் ஜெயகாந்தன் புகார் அளித்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் கிருஷ்ணவேணி, ஜெயகாந்தன் இருவருமாக சேர்ந்து, நகையை திருடியதாகவும், தற்போது ஜெயகாந்தன் தலைமுறைவாக உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் கிருஷ்ணவேணியிடம் இருந்து 11.5 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.