புழல் சிறையில் வெளிநாட்டு கைதிகளுக்கு கொடுமையா? - உயர் நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு
தமிழக சிறைகளில் உள்ள வெளிநாட்டு சிறை கைதிகள் நலன் தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள நைஜீரியா நாட்டை சேர்ந்த எக்விம் கிங்க்ஸ்லி என்பவர் தாக்கல் செய்த மனுவில் வெளி நாடுகளைச் சேர்ந்த 75 கைதிகள் சிறையில் அடித்து துன்புறத்தப்பட்டு, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டுமென கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளரை இணைத்து உத்தரவிட்டனர்.