Chennai | தோழி கூப்பிட்டாள் என்று வீட்டுக்கு சென்ற மாணவனை `ஜாதி’ பேரை சொல்லி அடித்த தோழியின் தந்தை

Update: 2025-09-13 05:47 GMT

"பரியேறும் பெருமாள்“ திரைப்பட பாணியில் ஜாதி பெயர் கூறி தாக்குதல்

தோழியை சந்திக்க சென்ற, மாணவனை, ஜாதி பெயரை சொல்லி ரத்தம் சொட்ட சொட்ட அடித்த, சிறுமியின் தந்தை மற்றும் சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர். சென்னை பட்டாளத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும், மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தோழியின் அழைப்பை ஏற்று, அவரது வீட்டிற்கு பார்க்க சென்ற மாணவனை, தோழியின் தந்தையும், சித்தப்பாவும் சேர்ந்து அறையில் பூட்டி அடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்