வயதான தம்பதியை நாயை ஏவி கடிக்க விட்ட கொடூர நபர்-கதிகலங்க வைக்கும் வீடியோ
சென்னை அடுத்த புழல் புத்தகரம் பகுதியில், வயதான தம்பதி மீது ராட்வீலர் நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராட் வீலர் நாய் முதியவரின் ஆடையை கடித்து அரை நிர்வாணமாக்கி துரத்தியுள்ளது. இதை தட்டிக்கேட்ட அக்கம்பக்கத்தினர் மீதும், நாயின் உரிமையாளர் நாயை ஏவி விட்டுள்ளார். இதுகுறித்து, பாதிக்கபப்ட்ட ரமேஷ் என்பவர் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்..