Chennai | Bus Accident | அரசு பஸ் டயர் வெடித்ததால் நேர்ந்த கொடூரம் - 9 பேர் பரிதாபமாக பலி
டயர் வெடித்து கார்கள் மீது மோதிய அரசு பேருந்து - 9 பேர் பலி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு பேருந்தின் டயர் வெடித்து, இரண்டு கார்கள் மீது மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்தின் டயர் வெடித்து, சாலையின் தடுப்பை மீறி எதிர் திசையில் வந்த கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு கார்களில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த ஆறு பேர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மற்ற மூவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். படுகாயமடைந்த 3 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், ஒருவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.