செல்லமுத்து மாரியம்மன் கோயில் சித்திரை பெருவிழா - பூத்தட்டு ஏந்தி ஊர்வலம் வந்த பக்தர்கள்
நாகை அருகே தேவூரில் உள்ள செல்லமுத்து மாரியம்மன் ஆலய சித்திரை பெருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வருகின்ற 28ம் தேதி நடைபெற உள்ளது.