CCTV | Police | பெட்ரோல் பங்க்-கில் தாக்குதல்.. சிக்கிய கவுன்சிலரின் சகோதரர் - பகீர் பின்னணி

Update: 2025-11-06 11:01 GMT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், பெட்ரோல் பங்க்கில் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தி.மு.க கவுன்சிலரின் சகோதரரை போலீசார் கைது செய்தனர். சாராய வியாபாரி மரூர் ராஜாவின் மைத்துனரும், திமுக கவுன்சிலர் ரம்யா என்பவரின் சகோதரருமான திண்டிவனம் அடுத்த முப்பிலி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பச் சென்றபோது, சலவதி ராமு என்பவரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், திண்டிவனத்தில் சுற்றித்திரிந்த சந்தோஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது கஞ்சா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகளும், உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்