அத்வானி ரத யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு - கோர்ட்டின் உத்தரவு

Update: 2025-08-23 03:22 GMT

அபூபக்கர் சித்திக்கிற்கு 7 நாள் போலீஸ் காவல் - விசாரணை

அத்வானி ரத யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் அபூபக்கர் சித்திக்கிற்கு ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேலூரை சேர்ந்த பாஜக நிர்வாகி அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு மற்றும் அத்வானி ரத யாத்திரையின் போது பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றில் அபூபக்கர் சித்திற்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. 30 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்ட அவர், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில், அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்த நீதிமன்றம், வரும் 28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்