Toiletஐ அடைத்து கேன்டீன்? தவித்த பயணிகள் - குருவாயூர் ரயிலில் நடந்தது என்ன?

Update: 2025-08-25 15:52 GMT

சென்னை குருவாயூர் ரயிலில், வாசல் கதவை அடைத்து, கழிவரை அருகே தின்பண்டங்கள் வைத்து விற்பனை செய்வதால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் இருந்து கேரள மாநிலம் குருவாயூர் வரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தினசரி ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ரிசர்வேஷன் பெட்டியின் கதவை அடைத்து, கழிவறை வாசலில் தின்பண்டங்கள் வைத்து விற்பனை செய்வதால், கழிவரை செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். டிக்கெட் பரிசோதகரும் இதனை கண்டுக்கொள்ளாமல் செல்வதாக குற்றம் சாட்டும் பயணிகள், இதில் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்