நெல்லை மாவட்டம், வள்ளியூர் பகுதிக்குள் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துக்கு அனுமதி இருந்தும் ஊருக்குள் பேருந்து செல்ல மறுத்ததாக நடத்துனர் உடன் ஒரு பயணி வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகிறது.
தொடர்ந்து வாக்குவாதம் நீடிக்கவே, அந்த பயணி விடாமல் தொடர்ந்து வள்ளியூர் செல்ல அனுமதி இல்லை என்றால் நான் இறங்கி விடுகிறேன் என்று கேட்டபோதும், அதற்கு முறையான பதிலை நடத்துனர் சொல்லாமல் இருந்ததாக தெரியவருகிறது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் வள்ளியூர் ஊருக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக செல்வதாக பொதுமக்கள் நீண்டகாலமாக குற்றச்சாட்டி வருவது, குறிப்பிடத்தக்கது.