Dindugul News | அமைதி சோலையில் கொடூர திகில் - 60 அடி ஆதிமூலத்தில் பெண் உடல்

Update: 2025-04-14 06:56 GMT

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட தாண்டிக்குடி செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை சாலையில் அமைதிசோலை என்ற இடத்தின் அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே 22 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் இருப்பதாக அப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக கன்னிவாடி காவல் துறையினர் வனப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாதி எரிந்த நிலையில் இறந்த பெண் யார் என்று தெரியாத நிலையில், கன்னிவாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்கு பின்பு இளம்பெண் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? என்ற காரணம் மற்றும் விவரங்கள் தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்